ஆழ்குழாய்க் கிணறுகள்

Home  >>  ஆழ்குழாய்க் கிணறுகள்

பாசிக்கானது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்குழாய்க்கிணறுகளின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரங்களில் வேளாண்சாராத/தொழிற்சாலை நோக்கங்களுக்காகவும் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் குறித்தசில பகுதிகளில் அனைத்து நோக்கங்களுக்காகவும் ஆழ்குழாய்க்கிணறுகள் கட்டப்படுகின்றன. பாசிக்கானது 350 மீட்டர் ஆழம்வரையிலான 200-2500 மிமி விட்டம்வரையுள்ள ஆழமற்ற குழாய்க்கிணறுகள் மற்றும் ஆழமான குழாய்க் கிணறுகள் கட்டுவதற்குத் திறன்வாய்ந்த சுழல் ஈரமண் சுழற்றும் இயந்திர வசதியைப் பெற்றிருக்கிறது. ஆழ்குழாய்க்கிணறு கட்டுமானப் பிரிவானது நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பணியாளர் அணியின் ஒத்துழைப்பைப் பெற்ற துணைப் பொது மோலாளரின் (ஆழ்குழாய்க்கிணறு) கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. குடிநீர் மற்றும் நீர்வளமுள்ள பகுதியை கண்டறிவதற்கான ஆழ்துளையை மூடுவதற்காக மின்மூடி பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆழ்குழாய்க்கிணற்றின் 100% வெற்றியை உறுதிசெய்வதற்கு நீரியலரின் பரிந்துரையும் பெறப்படுகிறது. ஆழ்குழாய்கள் முடிவுற்றபின்பு கீழ்நிலையின் ஆழம் பாறையியல் வெளியீடு விவரங்கள் நீரை வெளியில் இறைப்பதற்கான பொருத்தமான இயந்திர நீர்இறைக்கும்குழாய் முதலிய ஆழ்குழாய்க்கிணறு கட்டுமானத்தின் தொழில்நுட்ப நிலையிலான விவரமான தொழில்நுட்ப அறிக்கை ஒன்று பார்வைக்காக ஆழ்குழாய்க்கிணறு உரிமையாளர்களிடம் அளிக்கப்படுகிறது.

இக்கழகமானது நியாயமான கட்டணங்களில் பழைய ஆழ்குழாய்க்கிணறுகளைச் சுத்தம் செய்தல்/வீழ்ந்துவிட்ட நீருக்கடியிலுள்ள பம்ப்செட்டுகளை நீக்குதல் போன்ற செயற்பாடுகளையுடைய வேலைகளையும் கூடுதலாக மேற்கொள்கிறது. தற்போதிருந்துவரும் ஆழ்குழாய்க்கிணறுகளைச் சுத்தம் செய்வதற்காக காற்றழுத்தமானிகளின் உதவியுடன் ஆழ்குழாய்க்கிணறுகளின் மேம்பாட்டு வேலைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆழ்குழாய்க்கிணறுகள் கட்டுவதற்குத் தேவையான PVC குழாய்கள் மற்றும் பென்டோனைட் மண் மற்றும் கூழாங்கற்கள் முதலிய பிற தோண்டு பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. மேலும் குடிநீர்ப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்த பகுதிகளில் ஆழ்குழாய்க்கிணறுகள் அமைக்கும்போது கடல்நீர் நேர்செங்குத்தாகக் கசிந்துவிடாமல் தடுப்பதற்குக் களிமண்பந்து வைத்துகட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பாசிக் கழகமானது தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 350 ஆழ்குழாய்க்கிணறுகள் வெற்றிகரமாகக் கட்டப்பட்டுள்ளன.