புதுச்சேரி குடிநீர்

Home  >>  புதுச்சேரி குடிநீர்

“புதுச்சேரி நீர்” – உங்கள் நம்பிக்கைக்குரியது

“புதுச்சேரி நீர்” ஆனது, இந்தியாவில் மிகப்பழமையாக வழங்கிவருகிற கனிப்பொருள்நிறை நீர் (Mineral water) தரவகை ஆகும். 1989ல் நிறுவப்பட்டு பாசிக்கால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீரானது ஒற்றை ஆழ மூலாதாரத்திலிருந்து நேரடியாகப் புட்டிகளில் அடைக்கப்படுகிறது. எனவே, இதனால் தூய்மைக்கேடு ஏதுமில்லை மற்றும் அது இயற்கையான சுவை மற்றும் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற நீர்ச் சுத்தத்தின் மூலம் உங்கள் தாகத்தைத் தீர்த்துவைக்கிறது.

புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் புதுச்சேரி வேளாண்சார் பணி மற்றும் தொழிற்சாலைகள் வரைநிலைக் கழகமானது(பாசிக்) 1989ஆம் ஆண்டிலிருந்து இயற்கைக் கனிப்பொருள்நிறை நீரை புதுச்சேரி தரவகைப்பெயரின்கீழ் புட்டியிலிட்டு வாணிகம்செய்து வருகிறது. இது நாட்டில் கனிப்பொருள்நிறை நீரை வாணிகம் செய்கிற ஒரே அரசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகும்.

புதுச்சேரி நீரானது பின்வரும் சிறப்புக்கூறுகளைப் பெற்றுள்ளது.

 • இந்தியத் தரச் செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு உகந்தவாறு செய்யும்பொருட்டு பெரும்பாலான பிற தரவகைகளினால் செய்யப்படுகிற கனிப்பொருள்நீக்கம் எதிர் சவ்வூட்டுப்பரவல் முதலியவை போன்ற வேதியியல் செயல்முறைகளற்றதாக இருக்கிறது.
 • இந்த நீரானது நேரடியாக ஒரே மூலாதாரத்திலிருந்து புட்டிகளில் அடைக்கப்படுகிறது மற்றும் உள்ளூர்ப் பகுதிகளில் விற்பனை செய்யும்பொருட்டு போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்ப்பதற்காக தரவகைகளை பெருநகரங்களிலும் முன்னணி நகரங்களிலும் துணை-உற்பத்திசெய்ய அனுமதித்திருக்கிற மற்ற முன்னணி தரவகைகளைப்போலல்லாமல், இது வேறெங்கும் துணை உற்பத்தி செய்யப்படுவதில்லை.
 • இது ஒரே மூலாதாரத்திலிருந்து புட்டிகளில் அடைக்கப்படுவதால், அது விற்பனைசெய்யப்படுகிற பகுதிகளைப்பொறுத்து அன்றி, மற்ற முன்னணி தரவகைகளை ஒப்பிடுகையில் இந்த நீரின் சுவை ஒரே மாதிரியாகவே உள்ளது.
 • இயற்கையாக சரிவிகித அளவு நேர்அயனி மற்றும் எதிரயனி வீதச் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது.

புதுச்சேரி நீரானது புதுதில்லி ராஷ்டிரபதிபவனுக்கு 1989 முதல் 1995ஆம் ஆண்டு வரை அலுவல்முறையில் நீர்வழங்கும் சிறப்பு நிலையைக் கொண்டிருந்தது. புதுச்சேரி நீரானது குறித்தசில அயல்நாட்டுத் தூதரகங்கள் மற்றும் தில்லி சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குப் பணியாற்றுவதற்காக உள்ள உதவித் தூதர் அலுவலகங்கள், சென்னையிலுள்ள முன்னணி நட்சத்திர உணவகங்கள், மற்றும் இந்தியாவிலுள்ள பிற பெருநகரங்களால் ஆதரவளிக்கப்படுகின்றன.

வாழ்வின் அமுதமாக விளங்கும் புதுச்சேரி நீரின் சிறப்புக்கூறுகள்

 • நோய்விளைவிக்கின்ற பாக்டீரியா அற்றதாக இருக்கிறது.
 • இயற்கை மூல ஆதார ஆழ் நீரூற்றிலிருந்து பெறப்படுகிறது.
 • எவ்வகை வேதியல் கையாளுகைச் செய்முறையும் அற்றது.
 • அதன் இயற்கைத்தன்மையில் அது சுத்தமானதாகவும் சுவையானதாகவும் இருக்கிறது மற்றும் அதன் இயற்கைத்தன்மையிலிருந்து எதுவொன்றும் சேர்க்கப்பட்டிருக்வோ அல்லது நீக்கப்பட்டிருக்கவோ இல்லை.
 • நிரூபிக்கப்பட்ட பன்னாட்டுத் தரவகைகளுடன் ஒப்பிடுகையில் அதற்கிணையாக உள்ளது.
 • குழந்தைகளுக்கும் வயதான நோயாளிகளுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கிறது மற்றும் மற்றும் அது கலக்கப்படுகிறபோது எந்த பானமும் மேம்பட்ட சுவையைப் பெறுகிறது.
 • இதை, நெடுங்கால அளவுக்குத் திறக்காமல் வைத்திருந்தாலும், எச்சப்படிவு எதனையுமோ விடாது அல்லது திட்டுக்கள் எதனையுமோ ஏற்படுத்தாது.
 • இது M/S ஸ்ரீ ராம் தொழில் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர், பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம், SGS ஆய்வுக்கூடம், சென்னை முதலிய முன்னணி ஆய்வுக்கூடங்களில் முழுமையாக சோதனைசெய்யப்பட்டுள்ளன.
 • இந்தியத் தரம் (IS): 14543ன் படி இந்தியத் தரநிலைச் செயலகத்தினால் கூறப்பட்டுள்ள அளவுகோல்களைக் கொண்டிருக்கிறது.
 • இந்த நீரானது ஒரே மூலாதாரத்திலிருந்து புட்டிகளில் அடைக்கப்படுகிறது மற்றும் மற்ற முன்னணி தரவகைகளைப்போலல்லாமல் இது வேறெங்கும் துணை உற்பத்தி செய்யப்படுவதில்லை.
 • தில்லியோ அல்லது கன்னியாக்குமாரியோ, இதை எங்கு குடித்தாலும் ஒரே சுவையைக் கொண்டிருக்கிறது.
 • எளிதான அளவுகளில் நல்ல தரவகை PET புட்டிகளில் அடைக்கப்படுகிறது.

 2.0 லிட்டர் புட்டி – குடும்ப புட்டி. 1.5 லிட்டர் சிக்கன புட்டி. 1.0 லிட்டர் பொருத்தமான புட்டி. 0.5 லிட்டர் கையடக்கப் புட்டி. 12 லிட்டர் PET கலன், மற்றும் குமிழி மேல்குப்பி உள்ள 20 லிட்டர் கலன் ஆகிய பெரிய அளவு புட்டிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நீரானது பின்வரும் இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது்:-

 • SGS ஆய்வுக்கூடம், சென்னை,
 • Shriram தொழில் ஆராய்ச்சி நிறுவனம்,
 • பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்.

இந்தியத் தரநிலைச் செயலகமானது 7-8-2001 அன்று புதுச்சேரி தரவகை நீரை சிப்பமாக்கப்பட்ட குடிநீர் என ISI அடையாளச் சான்றளிப்பினை வழங்கியிருக்கிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் நுண்-உயிரியல் காரணிகளுக்காக நீரை தின அடிப்படையில் ஆராய்வதற்காக முழுமையான ஆய்வுக்கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன மற்றும் நீரின் தரத்தை உறுதிசெய்வதற்காக சென்னையிலுள்ள இந்திய தரச் செயலகமானது அடிக்கடி இத் தொழிற்கூடத்தைத் திடீர் சோதனை மேற்கொள்கிறது.

 பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற மிகப்பெரிய பன்னாட்டு மென் பான நிறுவனங்கள் ஆகியவையும் சிப்பமாக்கப்பட்ட குடிநீர் களத்தில் இறங்கி வணிகர்களுக்குக் கணிசமான தள்ளுபடி அளித்தல் மற்றும் விளம்பரங்களுக்காக பெருமளவு பணம் செலவிடுதல் முதலிய அவர்களுடைய தவறான வழக்கத்தின் காரணத்தினால் நாட்டிலுள்ள பெரும்பாலான நீர் தரவகைகளை அழித்துவிட்டன.பல தரவகைகளின் கடுமையான போட்டி இருந்தபோதிலும் புதுச்சேரி நீர் இத்துறையின் முன்னோடியாக இருக்கிற காரணத்தினால் போட்டியைச் சமாளித்து உற்பத்திப்பொருளை தில்லி, சென்னை மற்றும் புதுச்சேரியில் வெற்றிகரமாக விற்பனைசெய்ய இயல்கிறது.

கனிப்பொருள் நீரைப் புட்டியிலடைக்கும் துறையில் முன்னோடியாக உள்ள பிரெஞ்சியர் பொதுவாக உற்பத்திசெய்யும் தரவகையின் மூலாதார இடம் மற்றும் புட்டியிலடைக்கும் இடத்தின் பெயரையே சூட்டுவர். இதைப்போல் இந்த நீரும் புதுச்சேரி நீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் கிடைக்கலாகும் பிற கனிப்பொருள்நிறை நீர் அந்தந்த நிறுவனங்களின் சொந்தப்பெயரிலேயே அமைந்துள்ளன. எனவே, புதுச்சேரி நீரை தில்லியிலோ அல்லது கன்னியாக்குமரியிலோ பருகினால் நீரின் சுவையும் தரமும் ஒரேமாதிரியாகவே இருக்கும். பிற தரவகைகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புட்டியிலடைக்கப்படுவதால் அவற்றின் சுவையும் தரமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

இந்த நீரானது ஒரே மூலாதாரத்திலிருந்து பெறப்படுவதால் அது தில்லியை அடையும்போது அதன் போக்குவரத்துச் செலவு மிக அதிகமாகிறது. இருந்தபோதிலும், தூதரகங்கள், சிறுநீரக மாற்று அறுவை செய்த நோயாளிகள் மற்றும் இயற்கை கனிப்பொருள்நிறை நீர் விரும்பிகள் முதலிய சிறந்த வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.