கழிவுப்பொருள் எரு

Home  >>  கழிவுப்பொருள் எரு

அறிமுகம்

புதுச்சேரி வேளாண்சார் பணி மற்றும் தொழிற்சாலைகள் கழகமானது (பாசிக்) 1996ஆம் ஆண்டு பிப்ரவரியில் “ஊட்டமிக்க எரு உற்பத்திக்காக நகரகக் கழிவுகளை உயிரிசெய்முறைப்படுத்தல்” என்னும் திட்டம் ஒன்றைச் சிறிய அளவில் தொடங்கியிருக்கிறது. இந்தச் சுற்றுச்சூழல் நேசத் திட்டமானது, புதுச்சேரியில் உருவாகும் நகரகக் கழிவுகளை அறிவியல் மற்றும் ஆரோக்கியமான முறைகளின்மூலம் தீர்வுசெய்தல் மற்றும் இரசாயன உரப்பயன்பாட்டை 20-25%அளவுவரைக் குறைக்கும்பொருட்டும் மண்வளத்தையும் பயிர் உற்பத்தியையும் வேற்றுமைப்படுத்துதலைக் குறைக்கும்பொருட்டும் விவசாயச் சமூகத்திற்கு “ஊட்டமிகுந்த எருஉரம்” ஆகிய மட்கிய எரு நிறைந்த முடிவு உற்பத்திப்பொருளை அளிப்பதும் ஆகிய இரட்டை இலக்குகளை எய்துவதற்கான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது.

மூலப்பொருட்களின் ஆதாரம்

உழவர்கரை நகராட்சி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆகியவற்றிடமிருந்து பெறப்படுகிற நகரகக் கழிவுப்பொருள் முதன்மை மூலப்பொருளாக இருக்கிறது. புதுச்சேரியில் மதிப்பிடப்பட்ட உருவாக்க கழிவானது நாளொன்றுக்கு 200 டன் அளவில் இருக்கிறது. புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து பெறப்படுகிற பிரஸ்மட், கரும்புச்சக்கை மற்றும் நிலக்கரிஎரி மென்சாம்பல் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பெறப்படும் கயிற்றுக் கழிவு மற்றும் கோழிவளர்ப்புக் குப்பைக்கூளங்கள் முதலிய பிறமூலப்பொருட்களும் ஊட்டமிக்க எரு உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.

செய்முறையும் உற்பத்தியும்

பாசிக்கானது நகரகக் கழிவுப்பொருளை எருவாக மாற்றுகிற செய்முறைக்காக
புதுச்சேரியில் 3 எருஉற்பத்திப் பிரிவுகளையும் காரைக்காலில் ஒரு பிரிவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நகரகக் கழிவுப்பொருளை எருவாக்கும் செயலானது “விண்ரோவிலுள்ள (windrows) கழிவுப்பொருளை காற்றுவாழ் அணுவுயிர்மூலம் சிதைத்தல்” என்றழைக்கப்படும் கலைத்தொழில்நுட்ப நிலையின்மூலம் நிறைவேற்றப்படுகிறது. நுண்ணுயிர்களின் செயற்கை வளர்ச்சியை உட்புகுத்துதல் மூலம் மற்றும் தேவையான நொதித்தல் அதிகபட்ச நிலையை (ஆதரவான ஈரப்பதம் காற்று மற்றும் வெப்பநிலையைப் பராமரித்தல்) அளிப்பதன் மூலம் சிதைத்தல் விரைவுபடுத்தப்படுகிறது. எருவாக்கும் செய்முறையானது 40 முதல் 45 நாட்கள் வரை நிகழ்கிறது அதன் பின்பு சிதைக்கப்பட்ட பொருளானது இயந்திர சுழல் திரைகள் மற்றும் விரைவுஅதிர்வு சல்லடைகளின் உதவியால் பிரித்தெடுக்கப்படுகிறது. நகரக எரு முடிவு உற்பத்திப் பொருளாக இருக்கிறது. இது பிரஸ்மட் கரும்புச்சக்கை கயிற்று கழிவுகள் வேளாண் எச்சங்கள் கோழிவளர்ப்புக் குப்பைக்கூளங்கள் முதலிய சிதைக்கப்பட்ட உயிரிபொருட்கள் மற்றும் ஜிப்சம் ராக்பாஸ்பேட் ப்ளைஆஷ் போன்ற நிலச்சீர்திருத்தப் பொருட்களின் குறைந்த வீதம் மற்றும் இறுதியாக N2 நிலைநிறுத்தி மற்றும் P கரைசல் மற்றும் சூடோனாமாஸ் ப்ளோரெசன்ஸ் ஆகியவற்றுடன் கலக்கப்படுகிறது. இறுதி உற்பத்திப்பொருள் முழுமையாக் கலக்கப்பட்டு ஊட்டமிகுந்த எரு எனப் பெயரிடப்படுகிறது. அது பெரிய (N, P, K) இடைநிலை (Ca, S, Mg) மற்றும் சிறிய (Zn, Mn, Fe, Cu, B, Mo, CI) ஊட்டச்சத்துகள் மற்றும் தாவர வளர்ச்சியை மேம்படுத்துகிற ரைஸோபாக்டீரியா ஆகியவற்றுக்கும் கூடுதலாக உயிரி உட்பொருளை (20-25%) வளமாகக் கொண்டிருக்கிறது. இந்த வளமிக்க எரு சிப்பமாக்கப்பட்ட பைகள் மற்றும் சிப்பமாக்கப்படாத ஆகிய iரண்டு நிலையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இந்த 4 தொழிற்பிரிவின் வளமான எரு உற்பத்திக் கொள்திறனானது ஆண்டொன்றுக்கு 1, மெட்ரிக் டன் ஆகும்.