சிறப்புக்கூறுகள்

Home  >>  சிறப்புக்கூறுகள்

mainbuild1. பாசிக் எனப் பொதுவாக அறியப்படும் புதுச்சேரி வேளாண்சார் பணி மற்றும் தொழிற்சாலைகள் வரைநிலைக் கழகமானது, 1986ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இக் கழகமானது தரமான விதைகள், இயற்கை மற்றும் வேதியியல் எரு, தாவரப்பாதுகாப்பு இரசாயனப் பொருட்கள், தாவரப்பாதுகாப்பு உபகரணங்கள், தோட்டக்கலை சார் தாவரங்கள், துணைக் கருவிகள், கருவிகள், உயிர் உரங்கள் முதலிய அனைத்து வேளாண்சார் உள்ளீட்டுப் பொருட்களை சரியான காலத்தில், நியாயமான விலையில் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

2. வேளாண் உள்ளீட்டுப் பொருட்கள் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாமிலுள்ள 39 வேளாண் மண்டி இணைப்பு நிலையங்களின் மூலமாகவும் 3 வசந்தம் தோட்டக்கலை காட்சி அறைகள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. புதுச்சேரியில் 5 விற்பனை நிலையங்கள் மூலம் காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது.

3.பாசிக்கானது 2002-03ஆம் ஆண்டின்போது ரூ.18.65 கோடி விற்பனையைப் பதிவுசெய்துள்ளது. அதன் சந்தைப் பங்கானது, உரத்தின்மீது 35 முதல் 40% ஆகவும், தாவரப்பாதுகாப்பு இரசாயனங்கள் மீது 40 முதல் 45% ஆகவும், விதைகளின்மீது 70 முதல் 80% அளவாகவும் இருக்கிறது. உண்மையாக முத்திரையிடப்பட்ட பெருமளவிலான விதைகள் மட்டுமின்றி, உற்பத்திசெய்யப்பட்ட விதைகளுள் சான்றளிக்கப்பட்டவை முழுவதும் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பாசிக் மூலம் விற்பனை செய்யப்பட்ட மொத்த விதைகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளின் சதவீதமானது 19.6% லிருந்து 39%க்கு உயர்ந்துள்ளது.

4. இந்தக் கழகமானது தென்னை நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கும் தோட்டக்கலைத் தாவரங்களைப் பெருக்கச்செய்வதற்கும் அதற்கெனத் தனியே தோட்டக்கலைப் பண்ணையைக் கொண்டுள்ளது. தாவரங்கள் தாவர இல்லத்தில்(Greeஇ House) பெரிய அளவில் பெருக்கம் செய்யப்படுகின்றன. அது அலங்காரத் தோட்டங்களை அமைப்பதையும் அதைப் பராமரிக்கும் வேலையையும் மேற்கொள்கிறது. எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளும் பொருட்டு, வெவ்வேறு பழங்களின் தாய்த் தாவரங்கள் பண்ணையில் வளர்க்கப்பட்டு அதைப் பெருக்கச்செய்யும் வேலை விரைவில் தொடங்கப்படும். அது, வெவ்வேறு நிலைகளில் உரக் கலப்புகளைத் தயாரிப்பதற்காக அரசூரில் உரக்கலப்புப்பிரிவு ஒன்றையும் பெற்றுள்ளது.

5. கழகமானது நிலத்தடிநீர் ஆலோசனைச்சிறகம் ஒன்றையும் கொண்டுள்ளது. அது, வேளாண் சாராத நோக்கங்களுக்காக ஆழ்குழாய் அமைப்பதற்கும் எந்திர நீர்இறைப்பிகளை (motor pumpsets) நிறுவுதல் ஆகிய திறவுகாவலர் வேலைகளை மேற்கொள்கிறது. அது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரங்களிலுள்ள விவசாயிகளுக்கு நீரை வாடகைக்குப் பாய்ச்சுவதற்காக 81 சமுதாய குழாய்க்கிணறுகளைப் பராமரித்து வருகிறது.

6. இக்கழகமானது, அரசு துறை,முகமைகளால் ஒப்படைக்கப்படுகிற கட்டிட வேலைகளையும் செய்துமுடிக்கிறது.

7. 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுச்சேரி நீர்ப்பிரிவு மூலம் நீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இந்தியா முழுவதும் வாணிகர்களின் தொடர்பினால் விற்பனை செய்யப்படுகிறது. தரத்தை மேம்படுத்தவும் வளர்ந்துவரும் தேவையை எதிர்கொள்ளும்பொருட்டும் கனிப்பொருள்நிறை நீர் (mineral water) இயந்திரத்தொகுதி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறிய அளவு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

8. இக் கழகமானது அதன் விற்பனை நிலையங்கள் மூலம் மற்றும் அரசின் வெவ்வேறு துறைகள்,முகமைகளுக்கு சிமெண்டையும் விற்பனை செய்கிறது.

9. எதிர்காலத் தேவைகளைக் கணித்தறிந்து, நவீன வழிவகையைக் கொண்டு நகரகக் கழிவுகளிலிருந்து கலப்புரம் மற்றும் உயிரி-உரங்கள் தயாரித்தலுக்கான மற்றொரு சிறப்புவாய்ந்த திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பாசிக்கானது, பிரஸ்மட்(pressmud)ஐப் பயன்படுத்தி (புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை கார்வாஸ்க் (carwask), வடிசாலையிலிருந்து ஸ்பென்ட்வாஷ், முதலியவை) வளம்மிகுந்த Pressmud கலப்புரம் தாயாரிப்பதற்காக புதுச்சேரி வடிசாலை மற்றும் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கிடையில் ஒரு கூட்டுமுயற்சித் திட்டத்தில் இறங்கியுள்ளது.